வேலைவாய்ப்பு

சத்துணவு அமைப்பாளர் வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில்

ஆர். வெங்கடேசன்

திருநெல்வேலி மாவட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 139

பணி: சத்துணவு அமைப்பாளர்

காலிப்பணியிட விவரம்:
ஆலங்குளம் - 09
அம்பாசமுத்திரம் - 11
சேரன்மகாதேவி - 08
கடையம் - 09
களக்காடு - 07
கடையநல்லூர் - 02
கீழ்ப்பாவூர் - 10
குருவிகுளம் - 08
மானூர் - 10
மேலநீலிதநல்லூர் - 06
நாங்குநேரி - 05
பாளையங்கோட்டை - 11
பாப்பாக்குடி - 03
இராதாபுரம் - 08
சங்கரன்கோவில் - 09
செங்கோட்டை - 02
தென்காசி - 03
வள்ளியூர் - 02
வாசுதேவநல்லூர் - 13
புளியங்குடி நகராட்சி - 01
திருநெல்வேலி மாநகராட்சி - 02

தகுதி: பொது மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் அடிப்படை ஊதியம் ரூ.2500 - 5000 + தர ஊதியம் ரூ.500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2017.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, வயது சான்று, இருப்பிடம். சாதிச் சான்றுகள் மற்றும் முன்னுரிமை தகுதிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து வரும் 15க்குள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாதிரி விண்ணப்ப படிவம், காலிப்பணியிடங்களின் விவரம் திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் (www.tirunelveli.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nellai.tn.nic.in/pdf/noonmeal_org_03-05-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT