வேலைவாய்ப்பு

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படைக்கலத் தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்கள்

ஆர். வெங்கடேசன்

திருச்சியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படைக்கலத் தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்கள் 13-ஆம் தேதி நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறவாம். 

பயிற்சி காலியிடங்கள்: 86

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற துறைகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் தேவையான பள்ளி, கல்லூரி சான்றிதழ் மற்றும் வருமானம், சாதிச் சான்றுகளின் அசல் மற்றும் சுயச்சான்று செய்து நகல்கள் எடுத்துச் செல்ல வேண்டும். 

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பட்டய பிரிவினருக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 தொகை வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,984 தொகை வழங்கப்படும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.11.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  HRD Section, Ordnance Factory, Trichirappalli, Tamilnadi - 620016

தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்: (0431) - 2581291 - 296. Fax No:(0431) - 2581136

மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_341_1718b.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT