வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled/Lab Assistant

காலியிடங்கள்: 10 

துறைவாரி்யான காலியிடங்கள் விவரம்: 
1. Machinist - 03
2. Surveyor - 01
3. Electrician - 01
4. Wireman - 01
5. Fitter - 01
6. Automobile - 01
7. Turner - 01
8. Mechanic MV - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.vgptc.yolasite.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்த நகல்களை இணைத்தும் அதுனுடன் சுயமுகவரி எழுதப்பட்ட ரூ.25 மதிப்புள்ள தபால்கவர் ஒட்டப்பட்ட தபால்கவரை இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,
தொழுவூர், வலங்கைமான் - 612804
திருவாரூர் மாவட்டம்.

தனியார் அஞ்சல் (கூரியர்) மற்றும் நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://vgptc.yolasite.com/resources/Notification%20Tamil.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT