வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? மத்திய அரசில் 3259 கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3259 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கிளார்க் உள்ளிட்ட காலியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3259 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கிளார்க் உள்ளிட்ட காலியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் சிஹெச்எச்எல் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3259

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) - 898
2.  Postal Assistant/ Sorting Assistant - 2359
3. Data Entry Operator (DEO) - 02 

தகுதி: பள்ளி இறுதித் தேர்வு (+2) அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும். 
  
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வரை

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (தேர்வு-1), விவரிக்கும் காகிதம் தேர்வு (தேர்வு -2) மற்றும் தட்டச்சு தேர்வு, திறனறித் தேர்வுன் சோதனை (தேர்வு-3) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதனை டெபிட் ,கிரெடிட் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: நவம்பர் 18 முதல் டிசம்பர் 18 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/chsl2017_english_notice_17112017.pdf   என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

SCROLL FOR NEXT