கன்யோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள எழுத்தர், கீழ்நிலைப்பணியாளர் போன்ற பணியிடஙகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர்
காலியிடங்கள்: 2
தகுதி: ஏதேனும் இளம்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்தல் வேண்டும் . கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கீழ்நிலைப் பணியாளர் (சஃபைவாலா)
காலியிடங்கள்: 65
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbamritsar.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இணையதளத்திலேயே விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.canttboardrecruit.org/uploads/Amritsar/AAmritsar15.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.