வேலைவாய்ப்பு

டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை: 12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தில்லி

பணி: Engineer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.20,000

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் ஐடி துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்சிஏ, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் ஐடி துறைகளில் டிப்ளமோ முடித்து 2 அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 “The Executive Director (IT&HR), 
Telecommunications Consultants India Ltd., 
TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi - 110048” 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tcil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT