வேலைவாய்ப்பு

நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 48 காலிப்பணியிடம்: நிறுவனங்களுக்கு அழைப்பு

தினமணி

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாகவுள்ள 48 பணியிடங்களை அவுட்சோர்சிங்(அயல் பணி ஒப்படைப்பு) முறையில் நிரப்பத் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அலுவலகத்தில் 12 அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 36 சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்துக்கு தகுதியான நபர்களை பணிக்கு அனுப்பும் வகையிலான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 3 ஆண்டு அனுபவமிக்க நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
ஒப்பந்தம் ஓராண்டுக்கு அமலில் இருக்கும். நிறுவனமே ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து மீள பெற்றுக் கொள்ளலாம். பணிக்கு அனுப்பும் நபர்களின் செயல்பாடு திருப்தியில்லை எனில் அந்த நபர்களை திரும்பப் பெற்று மீண்டும் மாற்று நபர்களை அனுப்ப வேண்டும்.
அரசால் இந்த பணியிடங்களில் ஏதேனும் ரத்து செய்யப்பட்டால் அந்த பணியாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். பணியாள்களால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
அலுவலகத்தில் ஊதியமாக வழங்கப்படும் தொகையில் நிறுவனம் எந்தவித பிடித்தமும் செய்யாமல் வழங்க வேண்டும். பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் தவறாது ஊதியம் வழங்க வேண்டும். தேர்வு செய்யும் நிறுவனம் குறைந்தபட்சம் அந்த ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதற்கான வங்கி புத்தக நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நிறுவனம் ரூ.50-க்கான முத்திரை தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
தகுதியான நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அக்.13ஆம் தேதி காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலக பழைய கட்டடம், திருநெல்வேலி-9. தொலைபேசி 0462- 2500302.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT