வேலைவாய்ப்பு

தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் விஞ்ஞானி வேலை

மத்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள 203 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VASUDEVAN.K

மத்திய அரசின் புவியியல் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள 203 விஞ்ஞானிகள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT No. NIOT/E&P/03/Recruitment/2017 (Project)

மொத்த காலியிடங்கள்:
203

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1 Project Scientists -106
2 Project Scientific Assistants - 48
3 Project Technicians - 21
4 Project Administration - 28  

தகுதி: பொறியியல் துறையில் டெக்னாலஜி, மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், ஏரோனாட்டிக்கல், ஆட்டோமொபைல், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் கடல்சார் போன்ற பிரிவுகளில் பட்டம், கடல்சார் படிப்புகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் முதுகலை மற்றும் லைஃப் சயின்ஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 40, 35 மற்றும் 28க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.17

மேலும் வயதுவரம்பு சலுகை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.niot.res.in/documents/admin_advertisement/Project%20Advertisement%202017.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT