வேலைவாய்ப்பு

விவசாயத்துறையில் கிளார்க், ஸ்டெனோகிராபர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 கிளார் மற்றும் ஸ்டேனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 173

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Stenographer Grade III -    95
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் வீதம் 10 நிமிடம் சுருக்கெழுத்தில் எழுதி அதனை 50 நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk - 78
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in அல்லது www.icar.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2017

கிளார்க் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.10.2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.

சுருக்கெழுத்து பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.10.2017 அன்று மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.asrb.org.in அல்லது www.icar.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT