வேலைவாய்ப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறையில் செவிலியர் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை

ஆர். வெங்கடேசன்

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55

பணியிடம்: புதுச்சேரி

பணி: Staff Nurse

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 50 சதவீத மதிப்பெண்களுடன் செவிலியர் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் அல்லது மலையாளம் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Health & Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry - 605 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://health.puducherry.gov.in/Recruitment2017/StaffNurseRec/Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT