வேலைவாய்ப்பு

ரயில்டெல் நிறுவனத்தில் வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான (ஒப்பந்த அடிப்படையிலான) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

No. RCIL/2017/P&A/44/23
தேதி: 09.09.2017

மொத்த காலியிடங்கள்: 86

பணியிடம்: மேகாலயா, மிசோரம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineers - 48
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Sr. Manager - 30
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

பணி: Asst. General Manager - 08
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, டிகிரி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.railtelindia.com/JobFiles/Vacancy%20notice-detiled%20-%20NER.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT