வேலைவாய்ப்பு

கடலோர காவல் படையில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

VASUDEVAN.K

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். இந்த படைப்பிரிவில் தற்போது ‘யந்திரிக்/1-2018 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
3 வருட டிப்ளமோ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது 1.2.1996 மற்றும் 31.1.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் (ரேடியோ/பவர்) பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், மார்பளவு 5 செ.மீட்டரும். விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக் குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக் கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.joinindiancoastgu ard.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT