வேலைவாய்ப்பு

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர். வெங்கடேசன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிறுவனம் தற்போது என்.எல்.சி. இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் - 1961-இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 453

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 73
2. Turner - 24 
3. Mechanic (Motor Vehicle) - 83
4. Electrician - 77 
5. Wireman - 63 
6. Mechanic (Diesel) - 17 
7. Mechanic (Tractor) - 21 
8. Carpenter - 04
9. Plumber - 02 
10. Welder - 55 
11. PASAA - 17 

பயிற்சி காலம்: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,406 வழங்கப்படும்.

தகுதி: மேற்கண்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ நிறுவனத்தில் சம்மந்தசப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. Medical Lab Technician (Pathology) & (Radiology) - 17 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,480 வழங்கப்படும்.

பயிற்சி காலம்: 15 மாதங்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக முதலாம் ஆண்டு ரூ.6,480, இரண்டாம் ஆண்டு ரூ.7,406 வழங்கப்படும்.
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி இடம்: நெய்வேலி

வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
துணை பொதுமேலாளர், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 
வட்டம்-20, நெய்வேலி-607803.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர கடைசி தேதி: 12.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/trade_apprentice_training_22092017.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT