வேலைவாய்ப்பு

மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய அரசு காப்புரிமை கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறை நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரை கழகத்தில் நிரப்பப்பட உள்ள 200 Examiner of Patents & Designs பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Examiner of Patents & Designs 

காலியிடங்கள்: 220

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 04.09.2018 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: Bio-chemistry, Chemistry, Polimer Science போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் Polymer Engineering/Technology, Electrical Engineering, Bio-Medical Engineering, Computer Science, Information Technology, Electronics & Telecommunication Engineering, Metallurgical Engineering/Technology போன்ற பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 30,09.2018
தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, சென்னை, ஹாதராபாத்

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cgpdtmrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT