வேலைவாய்ப்பு

முதுகலை பட்டதாரிகளா நீங்கள்..? சிறப்பு அதிகாரி வேலைக்கு அழைக்கிறது ரிசர்வ் வங்கி

தினமணி


வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘கிரேடு-பி’  தரத்திலான ஒப்பந்த அடிப்படையிலான 60 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் துறைவாரியான ரகாலியிடங்கள் விவரம்:

பணி: Specialists in Grade 'B'
1. Finance - 14
2. Data Analytics - 14
3. Risk Modelling - 12
4. Forensic Audit - 12
5. Professional Copy Editing - 04
6. Human Resourse Management - 04

வயதுவரம்பு: 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 01.08.1984 மற்றும் 01.08.1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி: எம்.பி.ஏ. (நிதி), புள்ளியியல் முதுகலை பட்டம், இதர முதுகலை பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளமோ படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2018

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT