வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை

தினமணி


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்து வழங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனதில் நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் 3 டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: பொறியியல் துறையில் ஏரோனாடிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஏவியானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 3 டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2018  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hal-india.co.in/Common/Uploads/Resumes/888_CareerPDF1_DIPLOMA%20NOTIFICATION%202018.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT