வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை புதன்கிழமை

ஆர். வெங்கடேசன்

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை புதன்கிழமை (பிப்.28) கடைசி தேதியாகும். விண்ணப்பிக்க மறந்த தகுதியானவர்கள் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை மாலை 5.45 மணிக்குள் இவ்வலுகத்தில் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: ஓட்டுநர் - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: நகல் பரிசோதகர் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பதவி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பதவி: நகல் எடுப்பவர் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பதவி: அலுவலக உதவியாளர் - 31
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பதவி: மசால்ஜி - 06
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர் - 10
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

பதவி: துப்புரவாளர் - 02
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: துப்புரவாளர் மற்றும் சுதாராக ஊழியர் - 01
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு நாளை புதன்கிழமை (பிப்.28) மாலை 5.45 மணிக்குஎள் இவ்வலுவலகத்தில் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION_2.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT