வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ அகாடமிகளில் 415 அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு 

இந்திய ராணுவ அகாடமிகளில் காலியாக உள்ள 415 பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய தேர்வாணையம்

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவ அகாடமிகளில் காலியாக உள்ள 415 பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ்-2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் விவரம்: 
1. National Defence Academy (Indian Army) - 208 
2. National Defence Academy (Indian Navy) - 60 
3. National Defence Academy (Indian Air Force) - 92 
4. Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55  

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு(1)-2018 (என்.டி.ஏ. -1-2018 தேர்வு) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

வயது வரம்பு: 02.07.1999 மற்றும் 01.7.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். அதாவது 10+2 முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி. நேர்முகத் தேர்விண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையளவும் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவில் பெற்றிருக்க வேண்டும். 

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  முதல்கட்ட (பார்ட்-1) விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் கட்ட (பார்ட்-2) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/Notice_NDAI_2018_Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT