வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குதான்... 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி


தில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4,366

பணி: Teacher (Primary)

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Elementory Teacher Education, Junior Basic Traning-இல் 2 ஆண்டு டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது Elementary Education-இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்மப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT