வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? 3,030 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் 1,065 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்

ஆர். வெங்கடேசன்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் 1,065 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தெரிவானவர்களில், சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்னர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு, கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பணி மற்றும் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை பார்ப்போம்.

பணி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் (Lecturer in Government Polytechnic Colleges)
காலியிடங்கள்: 1,065

மறுத்தேர்வு: ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்வு முடிவு: செப்டம்பரில் வெளியிடப்படும்.

தேர்வுக்கான அறிவிப்பு தேதி: வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி: வேளாண்மை பயிற்றுவிப்போர் (Agricultural Instructor 25)
காலியிடங்கள்: 25 

தேர்வுக்கான அறிவுப்பு தேதி: வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வருகிறது. 

எழுத்து தேர்வு: ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தேர்வு முடிவு: ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: உதவி பேராசிரியர் (Assistant Professor for Government Arts and Science Colleges and Colleges of Education)

காலியிடங்கள்: 1,883

தேர்வுக்கான அறிவிப்பு: மே முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு: ஜூன் 2-வது வாரத்தில் நடைபெறும். 

முடிவு: ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். 

பணி: உதவி தொடக்க கல்வி அதிகாரி (Assistant ElementaryEducational Officer) 

காலியிடங்கள்: 57 

தேர்வுக்கான அறிவுப்பு: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.

எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு நடக்கிறது. 

தேர்வு முடிவு: அக்டோபரில் வெளியாகும்.

பணி: ஆசிரியர் தகுதி தேர்வு (Tamil Nadu Teacher Eligibility Test - Paper-I & II)

தேர்வுக்கான அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

முதல் தாள் தேர்வு: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கானது. 

இரண்டாம் தாள் தேர்வு: அக்டோபர் 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்களுக்கானது.  

தேர்வு முடிவுகள்: முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TRBPLAN/01032018/Annual%20Plan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT