வேலைவாய்ப்பு

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... தொலைத்தொடர்பு துறையில் வேலை

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "ICSIL"  நிறுவனத்தில் காலியாக உள்ள 670 ஐ.டி. உதவியாளர்

ஆர். வெங்கடேசன்

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "ICSIL" நிறுவனத்தில் காலியாக உள்ள 670 ஐ.டி. உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 670  

பணி: I.T.Assistant

தகுதி: கணினி அறிவியல் துறையில் பிசிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி., பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.இ., அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் ஒரு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச, எழுத தெரிந்திருப்பதுடன் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 20 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 80 சதவீதம் பிழையின்றி தட்டச்சு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,332 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு, குழு விவாதம் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் பற்றிய விவரம் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2018/04/IT-Assist.-Adv-.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT