வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் கார் ஓட்டுநர் வேலை

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்றவர்களிடம் இருந்து டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Staff Car Driver

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 24.12.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Director (Recruitment), O/o Chief Postmaster General, U.P.Circle, Hazratganj Lucknow - 226 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/NotificationForStaffCarDriver_UPCircle09112018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT