வேலைவாய்ப்பு

மத்திய அரசு துறைகளில் 581 என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வு - 2019: யூபிஎஸ்சி அறிவிப்பு

தினமணி


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு - 2019 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. 

இந்தியன் ரயில்வே, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள், மக்கள் கணக்கெடுப்புத் துறை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, ராணுவத்தின் பொறியியல் பிரிவு, தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. 

தேர்வு: UPSC - ENgineering Service Exam - 2019

மொத்த காலியிடங்கள்: 581

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.1.2019-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வு நடைபெறும் இடம்: தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற வலைத்தளத்த்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 6.1.2019 (உத்தேசமானது) 

மேலும் விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Engl_correctlinks.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT