வேலைவாய்ப்பு

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலை! 

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Civil)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி ஓபிசி பிரிவினர் 43க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 45க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Manager (P)/Rctt., RITES Limited, RITES Bhawan, Plot No.1, Sector - 29, Gurgaon - 122 001, Haryana

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.9.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT