வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை

சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்

ஆர். வெங்கடேசன்


சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Geographical Information System Specialist

தகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், Geography பிரிவில் முன்னைவர் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனிபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Urban Development Specialist

தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.60,000

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnurbanfreetn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai - 600 028

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT