வேலைவாய்ப்பு

ரூ.1.14 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு 

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தமிழக தொல்லியல் துறை 

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) 

மொத்த  காலியிடங்கள்: 18 

பணி:  Archaeological Officer

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800 

தகுதி: 28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.   

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.  வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.  தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. 

தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும். 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  29.02.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT