வேலைவாய்ப்பு

கெத்தான சம்பளத்தில் டிஆர்டிஓ-வில் கொட்டிக்கிடக்கும் எம்டிஎஸ் வேலை

இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்



இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.

மொத்த காலியிடங்கள்: 1817

பணி: Multi Tasking Staff (MTS)

தகுதி: 23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 23.01.2020 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு  அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2020



 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT