புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nursing Officer
பணி: Medical Laboratory Technologist
பணி: Physical Instructor
பணி: Psychiatric Nurse
பணி: Junior Engineer (Air Conditioning)
பணி: Electronics Assistant(workshop)
பணி: EEG Technician
பணி: Uro Technician
பணி: Dental Mechanic
வயதுவரம்பு: 30 முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நர்சிங் பிரிவில் இளங்கலை, முடித்து இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், எம்எல்எஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன் உடற்கல்வி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் இஇஜி பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், ரேடியோகிராபி, ரேடியோகிராபி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.