வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை உயர்நீதிமன்றத்தில் , கம்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 573 கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த

தினமணி


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 573 கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 1 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

மொத்த காலியிடங்கள்: 573

பணி: Computer Operator
காலியிடங்கள்: 76
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: Computer Scice, Computer Application பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Computer Application -இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Typist
காலியிடங்கள்: 229
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Office Automation -இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mhc.tn.gov.in  என்ற இணையதளம் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/126_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT