வேலைவாய்ப்பு

ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் அரசு பணி வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தினமணி


கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: கணினி இயக்குபவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: கணினி அறிவியலில் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது பி.ஏ, பி.காம் உடன் கணினியில் பட்டயப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் பரிசோதகர், படிப்பாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 32க்குள்ளும், ஆதிதிராவிட பழங்குடியினர், அருந்ததியர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை கல்வி தகுதியை விட அதிக கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர், கடலூர் மாவட்டம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் பெறுவது போன்ற முழுமையான விவரங்கள் பெறுவதற்கு https://districts.ecourts.gov.in/sites/default/files/2019%20Notification%20Tamil_2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT