வேலைவாய்ப்பு

தேசிய ஜவுளிக் கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 94

பணி: Senior Manager/Manager(Technical) 
காலியிடங்கள்: 23 (Senior Manager - 06, Manager - 08)
தகுதி: டெக்ஸ்டைல்ஸ் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (Finance) 
காலியிடங்கள்: 25
தகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (HR) 
காலியிடங்கள்: 34
தகுதி: எச்ஆர் பிரிவில் MBA அல்லது MSW முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Manager/ Joint Manager (Asset Management)
காலியிடங்கள்: 04
தகுதி: எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Manager (Information Technology) 
காலியிடங்கள்: 02
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Deputy General Manager, Deputy Manager (Legal)
காலியிடங்கள்: 04
தகுதி: எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: Manager Joint Manager/ Deputy Manager (Marketing) 
காலியிடங்கள்: 17
தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை National Textile Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ntc.itd.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றி நகல்களையும் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin – 110003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement%20&%20Application%20Form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT