வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு அறிவிப்பு... 8-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை

தினமணி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி மற்றும் அலுவலக காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Office Assistant - 15 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: Masalchi - 01 
பணி: Watchman - 06
தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  https://districts.ecourts.gov.in/kanchipuram என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிடப்பட்ட வயது, சாதி, தகுதி, தொழிற்கல்வி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றில் ஏதாவது இரண்டின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை குற்றவியல் நடுவர் அவர்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்(இருப்பு) செங்கல்பட்டு.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Criminal%20Unit%20Recruitment%20May%202019_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT