வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

வேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோரிடம் இருந்து

ஆர். வெங்கடேசன்


வேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஊராட்சி செயலாளர்

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.15,900

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஆலங்காயம் வட்டாரம், வேலூர் மாவட்டம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT