வேலைவாய்ப்பு

ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலை

மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல்

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர், நிதி மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

மொத்த காலியிடங்கள்: 34

பணியிடம்: சென்னை தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Sr. Technical Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.67,700

பணி: Technical Officer  - 03
சம்பளம்: மாதம் ரூ.56,100

பணி: Asst. Technical Officer - 04
சம்பளம்: மாதம் ரூ.44,900

பணி: Technical Assistant Gr.III (Tool Room /Testing /Processing/Design(CAD-CAM-CAE)) - 01
சம்பளம்: மாதம் ரூ.67700

பணி: Sr. Officer (Finance & Accounts) - 02
சம்பளம்: மாதம் ரூ.56,100

பணி: Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 04
சம்பளம்: மாதம் ரூ.44,900

பணி: Asst. Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 12
பணி: Administrative Assistant Gr. III - 02
பணி: Accounts Assistant Gr. III - 03
சம்பளம்: மாதம் ரூ.21,700

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மை துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள்,  பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 32 - 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032”

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cipet.gov.in/job-opportunities/downloads/16-11-2019-001/Advertisement_SC_ST_R.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT