வேலைவாய்ப்பு

டிஆர்பியின் புதிய வேலைவைய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா? 

தமிழக தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்

ஆர். வெங்கடேசன்


தமிழக தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 97

பணி: Block Educational Officer

தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, சூழ்நிலையியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று கல்வியியல் (பி.எட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.trb.tn.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/beo2019/beo.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT