வேலைவாய்ப்பு

ரூ.56,000 சம்பளத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  30

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - 56,500 
சங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1

பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் 13,000 - 45,460
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4

பணி: உதவியாளர் 
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 62,000
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18

பணி: இளநிலை உதவியாளர் 
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
சங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை - 10

பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
சங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி:  ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ இமையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT