வேலைவாய்ப்பு

இது ஓர் அரிய வாய்ப்பு.. நாடு முழுவதும் 8000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான

தினமணி

இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 8000

பணி: PGT 
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

பணி: TGT 
தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

பணி: PRT
தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT