வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: எல்ஐசியில் 8,500 உதவியாளர் வேலை

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள 8,500 உதவியாளர் பணியிடங்களுக்கான

தினமணி


இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள 8,500 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

நாடு முழுவதும் 8 மண்டலங்களாக விரிந்துள்ள எல்ஐசி நிறுவனம், 8 மண்டலங்களிலும் காலியாக உள்ள மொத்தம் 8,500 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு மண்டலத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர், திருநெல்வேலி, வேலூர் ஆகியவற்றுக்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 8,500

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.14,435 - ரூ.40,080

வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: http://licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும் தேதி: 15.10.2019 முதல் 22.10.2019

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 2019, அக்டோபர் 21, 22

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி:  பின்னர் அறிவிக்கப்படும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பதிவு தொடங்கும் தேதி: 17.09.2019 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2019 


உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT