வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தில் வேலை

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்களுக்கான ஆராய்ச்சி மையத்தில்

தினமணி


வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்களுக்கான ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகள், அறிவியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Materials Management Executive
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Laboratory Technician
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பதுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Management Executive
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncbindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Director General, , Delhi-Mathura Road (NH-2), Ballabgarh - 121 004. Haryana

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ncbindia.com/wp-content/uploads/HRSPER/Advt3728082019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  

விண்ணப்பங்கள் அஞசலில் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 22.09.2019
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT