வேலைவாய்ப்பு

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா? 

நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின்

தினமணி



நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 304

வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 187
பணி: Manager (General) - 08
பணி: Manager (Depot) - 46
பணி: Manager (Movement) - 12
பணி: Manager (Accounts) - 68
பணி: Manager (Technical) - 44
பணி: Manager (Civil Engineering) - 04
பணி: Manager (Electrical Mechanical Engineering) - 05 

தெற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (General) - 09
பணி: Manager (Depot) - 06
பணி: Manager (Movement) - 19
பணி: Manager (Accounts) -  30
பணி: Manager (Hindi) - 01

மேற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (General) - 01
பணி: Manager (Depot) - 04
பணி: Manager (Movement) - 01
பணி: Manager (Accounts) - 07
பணி: Manager (Technical) - 01
பணி: Manager (Hindi) - 01

கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (General) - 02 
பணி: Manager (Depot) - 20
பணி: Manager (Accounts) - 09
பணி: Manager (Technical) - 05
பணி: Manager (Hindi) - 01 

வட-கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (General) - 02
பணி: Manager (Depot) - 11
பணி: Manager (Accounts) - 07
பணி: Manager (Technical) - 03
பணி: Manager (Civil Engineering) - 03

சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ. 40000 முதல் 1,40,000 வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en என்ற லிங்கில் சென்று மண்டலங்கள் வாரியான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT