காந்தி கிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள கள ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : காந்தி கிராம ஊரக நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 02
பணி: Research Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணிக்காலம்: 10 மாதம்
பணி: Field Investigator - 01
சம்பளம்: மாதம் ரூ.10,625
பணிக்காலம்: 6 மாதம்
தகுதி: ஏதாவதொரு துறையில் எம்.பில் முடித்தவர்கள், சமூக அறிவியல் துறையில் எம்.ஏ, முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் தங்களைப்பற்றிய சுயவிவரங்கள் அடங்கிய படிவம் தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள், செல்போன் எண், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/res_asst190220.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.03.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.