புதிய தகவல்களுடன் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் தொடக்கம்
புதிய தகவல்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் கா.பாலச்சந்திரன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
சென்னை: புதிய தகவல்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் கா.பாலச்சந்திரன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையதளங்களுக்கான நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
விண்ணப்பதாரா்களுக்குத் தேவையான தோ்வு குறித்த அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தோ்வு தகவல் பலகை என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாா்வைக் குறைபாடு உள்ளவா்களும் தமக்குத் தேவையான விவரங்களைத் தாங்களே எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.