மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக
மேற்கு வங்கத்தில் பாஜக பிரசாரத்தில் மோடி உரை...
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகப் பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள கத்வா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகவே பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகதிகள் மத்தியில் அச்சத்தைப் பரப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாப்பின் கீழ் மத்துவா மற்றும் நாமசூத்திர அகதிகள் குடும்பங்கள் இருப்பதாகவும், அகதிகளுக்குக் குடியுரிமை கிடைப்பதற்காகவே மோடி குடியுரிமை சட்டத்தை இயற்றியதாக அவர் கூறினார்.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிஏஏ-வின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவுபடுத்தப்படும்.
தெற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் பரவியுள்ள மத்துவா சமூகம் செல்வாக்குமிக்க தேர்தல் வாக்கு வங்கியாகக் கருதப்படும். இந்த மாநிலத்தில், குடியுரிமை, அரசியல் ரீதியாகத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஊடுருவியவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்க வேண்டும், வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊடுருவியவர்களுக்கு உதவியவர்கள் யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள். திரிணமூல் காங்கிரஸ்மீதான மறைமுகத் தாக்குதலாகவே இது பார்க்கப்படுகிறது.
முதல்வர் மமதா பானர்ஜியின் 15 ஆண்டுக்கால ஆட்சி வங்காளத்தில் அச்சச் சூழலை உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.
Prime Minister Narendra Modi on Saturday sharpened the BJP's pitch on infiltration and welfare in poll-bound West Bengal and promised that the process of granting citizenship to Matua and Namasudra refugee families will speed up once the party comes to power.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.