மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேரை வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்: நியூஸி. பிரதமர்
பிரதமர் மோடி குறித்து நியூஸிலாந்து பிரதமர் லக்ஸன் கூறியது பற்றி...
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேர் வறுமையிலிருந்து முன்னேறியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கூறியுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியில் நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் பேசியதாவது, நான் இந்தியாவின் பெரிய ரசிகராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். என் இருபது வயதுகளில் யூனிலீவர் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக இந்தியாவுக்குச் சென்றேன். இது இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாகும்.
1990-களில் இந்திய மக்கள் பெரும்பாலும் குறைந்தளவிலேயே ஊதியம் பெற்று வந்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், நரேந்திர மோடி ஆட்சியின்கீழ், தற்போது 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர். தற்போது 44 கோடி பேர் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், அடுத்த 10 ஆண்டுகள் முடிவில் 75 கோடியாக மாறுவர். இது ஒரு நம்பமுடியாத மாற்றம்.
இந்தியாவுக்கு பலமுறை பயணம் செய்த ஒருவர் என்ற முறையில் நான் கண்டது என்னவெனில், குறைந்த வருமானத்திலிருக்கும் ஒருவர் நடுத்தர அல்லது உயர் வருமானத்துக்கு முன்னேறுவதைக் காண்பதும், நடக்கும் மாற்றங்களும் ஊக்களிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நியூஸிலாந்து சென்றடைந்ததன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
250 million people have been lifted out of poverty under Modi's leadership, says New Zealand PM Christopher Luxon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.