மகளிர் இடஒதுக்கீடு மசோதா! நிச்சயம் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி உறுதி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயமாக நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி கூறியது குறித்து...
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயமாக நிறைவேற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நவ. 30 முதல் டிச. 3 வரையில் நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய மகளிர் இடஒதுக்கீட்டுடன் கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், மசோதா நிறைவேற்றப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நாட்டின் பெண்களுக்கு நாங்கள் ஒரு வாக்குறுதி (இடஒதுக்கீடு) அளித்தோம். அதனை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.