தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்!
தங்கம் வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி பேசியது பற்றி...

தங்கம் வாங்குவதைத் தள்ளி வைக்கவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை ஒத்தி வைக்கவேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை பெரியளவில் சரிவடைந்து வௌம் நிலையில் பிரதமர் மோடியின் முந்தைய அறிவுரைக்கு நன்றி தெரிவித்து, வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (சிடிஐ) கடிதம் எழுதியுள்ளது.
ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1.90 கோடியிலிருந்து ரூ.1.25 கோடியாக, ரூ.65 லட்சம் வரை சரிந்ததால், பிரதமரின் ஆலோசனை மூலம் லட்சக்கணக்கான நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “இந்திய மக்கள் தங்கம் வாங்குவதைத் தள்ளிவைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தபோது காங்கிரஸ் கட்சியினர் அதனை மரண சாசனம் என வர்ணித்தனர்.
தற்போது உலகளவில் தங்கத்தின் விலை சரிந்துள்ள நிலையில், பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றிய வணிகர்கள் ஒரு கிலோ தங்கத்திற்கு ரூ. 65 லட்சம் வரை சேமித்துள்ளனர்.
இதற்காக வணிகர் அமைப்புகள் பிரதமருக்கு இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.
வணிகர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
பெரும்பான்மை இந்திய மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த காந்தி - வதரா குடும்பத்தினர், பிரதமர் மோடியிடமிருந்து பொருளாதார வாழ்க்கை மற்றும் எளிய வாழ்க்கை முறை தொடர்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.