FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்திருப்பது பற்றி...

16 நவம்பர் 2026, 9:57 am
தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று (நவ. 16) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேபோல், சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,320-க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, ரூ.1,90,000-க்கு விற்பனையாகி வருகிறது.

வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது நகை வாங்கக் காத்திருந்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

"On the first day of the week today (Nov. 16), the prices of ornamental gold and silver have dropped sharply."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.