40 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து சென்றடைந்த முதல் இந்திய பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்து சென்றடைந்தது பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நியூசிலாந்து சென்றடைந்ததன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 8 அம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு முக்கிய பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பில் இருநாடுகள் இடையிலான முக்கிய கூட்டுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Advertisement
Advertisement
மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகளை நாட்டுக்கு திரும்ப அளித்தது மற்றும் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்தது என முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், தன்னுடைய பயணத்தின் அடுத்த கட்டத்தில் நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் வரவேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சற்று நேரத்திற்கு முன்பு ஆக்லாந்து வந்தடைந்தேன். விமான நிலையத்தில் அளித்த வரவேற்புக்கு பிரதமர் லக்ஸனுக்கு நன்றி. கடந்த நாற்பது ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு ஒரு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நட்புறவு குறித்து விவாதிப்பதற்கும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆக்லாந்தில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
By arriving in New Zealand on Friday (July 10), Prime Minister Narendra Modi has earned the distinction of being the first Indian Prime Minister to visit the country in 40 years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.