வேலைவாய்ப்பு

சாகித்ய அகாடமியில் சுருக்கெழுத்தர் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.SA/50/6/2020

பணி: Stenographer Grade-II

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 202,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஒரு ஆண்டு சுருக்கெழுத்தராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Swcretary, Sahitya Akademi, Rebindra Bhavan, New Delhi - 110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2020

மேலும் விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/Stenographer-GR-II.pdf  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT