வேலைவாய்ப்பு... கோவா கப்பல்தளம் நிறுவனத்தில் மேலாளர் வேலை
கோவா கப்பல்தளம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கோவா கப்பல்தளம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பொறியியல் பட்டதாரிகள், எம்பிஏ, சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2021
பணி: Deputy General Manager (Export) - 01
வயதுவரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
பணி: Senior Manager (Administration) - 01
பணி: Senior Manager (Electrical and Weapon) - 01
பணி: Senior Manager Manager (Hull) - 01
பணி: Deputy Manager (Internal Audit) - 01
பணி: Deputy Manager(Finance) - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், நாவல் ஆர்க்கிடெச்சர் போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம், எம்பி, சிஏ பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 33 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Goa Shipyard Limited, Vasco-da-Gama என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.goashipyard.in அல்லது https://goashipyard.in/file/2021/03/Advertisement-01.2021.pdfஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2021